காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த ராகி அப்பம் உதவும். எளிதாக செய்யக்கூடிய இந்த அப்பம், அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவாகவும் அமையும்.
என்ன தேவை?
ராகி (கேழ்வரகு) மாவு – அரை கப்
கோதுமை மாவு – ஒரு கப்
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – அரை கப்
தயிர் – கால் கப்
வெல்லம் – ஒன்றரை கப்
எண்ணெய் – கால் கப்
நெய் – கால் டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
சமையல் சோடா – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
ராகி மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றா கச் சேர்த்து சலிக்கவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் வெல்லப்பாகு, தயிர், ஏலக்காய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். அத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: இள வயதில் முதுகுவலி.. என்ன காரணம்? தீர்வு உண்டா?
காலையில ஏர் ஷோ, நைட் பீர் ஷோ – அப்டேட் குமாரு
விமான நிகழ்ச்சி: பாதுகாப்பு குளறுபடியால் மக்கள் உயிரிழப்பு… எடப்பாடி கண்டனம்!
பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ரோஸ்மேரி வாட்டர்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?
ஹெல்த் டிப்ஸ்: கர்ப்பப்பையை நீக்கினால் தாம்பத்ய உறவு பாதிக்குமா?