உதவியாளருக்கு காயம்: மாநகராட்சி ஆணையருக்கே இந்த நிலையா?

Published On:

| By Selvam

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் காயமடைந்த தனது உதவியாளரை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் யாரும் இல்லாத சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் சிவகாமி நவம்பர் 9-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வழங்கினர்.

தூய்மை பணியாளர் சிவகாமி வீட்டிற்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்குவதற்காக ஆணையரின் உதவியாளர் ராமன் கதவை திறக்க முயன்றுள்ளார். அதனை பார்க்காமல் ராதாகிருஷ்ணன் கதவை திறந்ததால் உதவியாளர் ராமன் மீது கதவு மோதி கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ராதாகிருஷ்ணன் தனது காரில் ராமனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன், தனது உதவியாளரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சை தேவைப்படுவதால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் தொடர்ந்து மூன்று முறை அழைத்த பின்னரே 108 ஆம்புலன்ஸ் மருத்துவனைக்கு வந்துள்ளது. அதில் உதவியாளர் ராமன் அழைத்து செல்லப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசு சேவை எளிதில் கிடைப்பதில் மாநகராட்சி ஆணையருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹரிஷ் கல்யாணின் “டீசல்” படம் ஷூட்டிங் ஓவர்!

சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share