கோவையில் அதிர்ச்சி… வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தற்கொலை!

Published On:

| By Raj

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம்பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Rabid dog bite victim commits suicide

உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமன்றி பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்த நோய் ஏற்படுகிறது.

உலக அளவில் ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு 65,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலும் ரேபிஸ் நோய் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல், வாந்தி வருவதுடன் உணவு சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் சிரமம் எற்படும். அவர்களின் உயிரிழப்பு வேதனையானதாக இருக்கும். Rabid dog bite victim commits suicide

இந்த நிலையில் ரேபிஸ் அறிகுறியுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளி ராம் சந்தர் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று (மார்ச் 11) கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘கண்ணியம், கௌரவத்துடன் உயிரிழப்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று’ என்று கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டோரை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்த 2 வாரங்களில் விசாரணை தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share