சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத் துறை வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 21) ரத்து செய்தது.
2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் ஜாபர் சேட்.
சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக இவர் மீதும், இவரது மனைவி பர்வீன் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்..
இவ்வழக்கில் ஜாபர் சேட் தரப்பில், “எனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ரத்து செய்துவிட்டது. எனவே, , அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. தனது மனைவிக்கு எதிராக பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாபர் சேட்க்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.
ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… மக்களே அலர்ட்!
கிருஷ்ணகிரி சிறுமி வன்கொடுமை: 15 நாளில் விசாரித்து முடிக்க ஸ்டாலின் உத்தரவு!