பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தகவல் இன்று(செப்டம்பர் 25) அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகள் வருகிற 27ஆம் தேதியுடன் முடியவுள்ளது. அதற்கு பின் அக்டோபர் 2 வரை காலாண்டு விடுமுறை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்பு அறிவித்திருந்தது.
வழக்கமாக 9 நாட்களுக்கு விடப்படும் காலாண்டு விடுமுறை இந்த ஆண்டு 5 நாட்களுக்கு மட்டும் விடப்பட்டது குறித்து ஆசிரியர் சங்கம் பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
ஆசிரியர் சங்கம் எழுதியிருந்த அந்த கடிதத்தில் “ இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை வரவுள்ளது. இதில் செப்டம்பர் 28 மற்றும் 29 முறையாகச் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வருகிறது. மேலும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. இதன்படி பார்த்தால் காலாண்டு விடுமுறை வெறும் 2 நாட்கள் மட்டும்தான்.
இதுமட்டுமல்லாது, விடைத்தாள்களைத் திருத்துவதற்கும் போதுமான அவகாசம் ஆசிரியர்களுக்குத் தேவை. அதனால் அக்டோபர் 3 மட்டும் 4ஆம் தேதியும் விடுமுறை அளிக்கவேண்டும்.” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்ட பேருந்து சேவையைத் துவக்கிவைத்து விட்டு பத்திரிகையாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார்.
அப்போது பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு “ இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை 3 அல்லது நான்கு நாட்கள்தான் வருகிறது. அதற்குள் நாங்கள் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அதனால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இதுகுறித்து முதன்மை செயலாளரிடம் நான் பேசியுள்ளேன். அது குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும்” என்று பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதிக ரிஸ்க்குள்ள கேரளாவில் அணு உலைகளா? கிளம்பிய எதிர்ப்பு!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!
“திமுக பவள விழாவை கூட்டணியுடன் கொண்டாடுவோம்” – தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!