மாணவர்களுக்கு குட் நியூஸ்… காலாண்டு விடுமுறை நீட்டிப்பு… எத்தனை நாட்கள் தெரியுமா?

Published On:

| By Kavi

தமிழகத்தில் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024-25  கல்வி ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, வழக்கமாக 210 நாட்கள் இருக்கும் வேலை நாட்களை அதிகரித்து, இந்த ஆண்டு 220ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஆசிரியர்கள் சங்கங்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மீண்டும் 210 நாட்கள் என்று குறைத்து பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்த சூழலில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிந்த பின்னர் 28ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பள்ளி காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து துறை சார்ந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.

இன்றுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், பள்ளிக்கல்வி தறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டு தேர்வு முடிந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 5 நாட்களோடு சேர்த்து தற்போது கூடுதலாக  4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

மொத்தமாக 9 நாட்கள் காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.

பிரியா

திருப்பதி லட்டுவும்… கும்பகோணத்தில் வெட்டப்பட்ட 23 ஆடுகளும்! அம்பலப்படுத்தும் அமரர் கல்கி

புதுக்கோட்டை: சாலையோரம் நின்ற காரில் 5 உடல்கள் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share