புழல் ஏரிக்கரையை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On:

| By Monisha

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கரையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக புழல் ஏரி விளங்குகிறது.

தற்போது கோடை வெயில் அதிகரிப்பால் ஏரியில் குளிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் கரைப்பகுதி இல்லாத செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஆலமரம் பகுதி, அன்னை இந்திரா நகர், பம்மதுகுளம், கோணிமேடு, லட்சுமிபுரம், சரத்து கண்டிகை, எரான்குப்பம், பொத்தூர், உப்பரபாளையம், திருமுல்லைவாயல்,

ஒரகடம், முருகாம்பேடு, சண்முகபுரம், சூரப்பட்டு, மேட்டூர் வரை உள்ள புழல் ஏரி பின்புறம் கரை மற்றும் தடுப்பு இல்லை.

இந்தப் பகுதிகளை லாரி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கழுவும் இடமாகவும், துணிகள் துவைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

சண்முகபுரம் பகுதியில் உள்ள ஏரியில் ஆகாய தாமரை மற்றும் கோரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

இதில், சிலர் விளையாட்டுத்தனமாக மீன் பிடிப்பதனால் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.

செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை பகுதியிலிருந்து ஏரியின் மதகு வரை கரை இருக்கிறது.

இங்கே பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், நடைப்பயிற்சிக்கு கூட செல்ல முடியாத அளவில் உள்ளது.

Puzhal lake shores must be protected

இது ஒருபக்கம் இருந்தாலும் ஏரியின் மதகிலிருந்து சாமியார் மடம், தண்டல்கழனி, காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு கரைகள் உள்ளது.

இந்த கரைப்பகுதிகளில் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் இல்லை. இதனால் மாலை நேரங்களில் காதலர்கள் என பலர் வருகின்றனர். மர்ம ஆசாமிகள் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறிப்பது தொடர் கதையாக வருகிறது.

எனவே, பொதுப்பணித்துறையினர் கரை மேல் உள்ள மின் கம்பங்களில் விளக்குகளை அமைக்கவும், மற்றொரு புறமுள்ள கரையில் கழிப்பிடமாக மாற்றுவதைத் தவிர்க்கவும்,

கரைகள் இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு கம்பிகள் வைத்து இங்கு யாரும் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது,

என உத்தரவுகளை பிறப்பிக்கவும் மற்றும் ஏரி கரைப்பகுதியில் சுழற்சி முறையில் புழல், செங்குன்றம் போலீஸார் ரோந்து பணி செல்லவும், ஏரியில் அத்துமீறி குளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தோனிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்: சேவாக் அறிவுரை!

குரூப் 1 தேர்வு முடிவு எப்போது?

கிச்சன் கீர்த்தனா: சாமை பெசரெட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel