ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28-வது நபராக டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீஸார் இன்று (செப்டம்பர் 23) சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீசார், ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அவரது மனைவி பொற்கொடி, மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முன்னாள் நிர்வாகிகள் உள்பட 27 பேரை கைது செய்தனர். இதில் 25 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டது
மேலும், இந்த வழக்கில் தேடப்பட்ட சீசிங் ராஜா 29-வது குற்றவாளியாகத் தனிப்படை போலீசாரால் நேற்று (செப்டம்பர் 22) ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் நீலாங்கரை அருகே இன்று காலை என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ரவுடிகளுக்கு வெடிகுண்டு விநியோகித்த புதூர் அப்புவை தனிப்படை போலீசார் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.
பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் ஆவணம் பெற்று, தமிழ்நாடு விரைவு ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று அழைத்துவரப்பட்டார்.
தொடர்ந்து எழும்பூரில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டை தயார் செய்ய சொன்னது யார்? அதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைத்தது? ஆம்ஸ்ட்ராங் கொலையில் பணம் எப்படி கைமாறியது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்… ரூ.60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை.!
மனைவி, குழந்தைகளை தவிக்கவிடுபவர் நல்ல மனிதரா? – யாரை சொல்கிறார் நடிகை குஷ்பூ
கிண்டியில் பசுமைப் பூங்கா வரவேற்கத்தக்கது… ஆனால்! – அன்புமணி டிமாண்ட்!