சிறையில் விசாரணைக் கைதி மரணம்!

தமிழகம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, விசாரணைக் கைதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சின்னத்துரை மற்றும் முருகப்பன்  ஆகிய இருவரும், கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 20-ம் தேதி, காரையூர் பகுதியில்  இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து, 77 கிலோ புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.58 ஆயிரம் ஆகும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

pudukottai Prisoner died in jail

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சின்னதுரை என்ற விசாரணை கைதிக்கு திடீரென நேற்று (ஆகஸ்ட் 21) மதியம் மாரடைப்பு  ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக சின்ன துரையை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில், மருத்துவமனைக்கு அவர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது இறந்த விசாரணை கைதியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

pudukottai Prisoner died in jail

விசாரணை கைதியான சின்னத்துரை மரணம் அடைந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக் கைதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செல்வம்

தமிழகம்: விசாரணை கைதிகளின் மரணம் அதிகரிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *