புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் 500 நிரந்த ஊழியர்களும், 270 ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், புதுச்சேரி போக்குவரத்து ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி முதல்வர் ரங்கசாமி இன்று (ஜூலை 4) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804-லிருந்து, ரூ.16,796- ஆகவும், ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ.10,656-லிருந்து ரூ.16.585-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி, போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான, எஸ்.சிவக்குமாரிடம் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.
இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup: இந்திய அணி வீரர்களிடம் மோடி சொன்ன அந்த விஷயம்!
தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ’ராயன்’ ஆடியோ லாஞ்ச் எப்போது?