ஹோலி பண்டிகையை முன்னிட்டு வரும் மார்ச் 14ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. puducherry jipmer op not working on march 14
இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக ’ஹோலி’ பண்டிகை உள்ளது. இந்தாண்டு வரும் 14ஆம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஹோலி பண்டிகையை ஒட்டி மார்ச் 14ம் தேதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு விடுமுறை தினமான 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று “ஹோலி பண்டிகையை” முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் OPD பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் தேதியில் இயங்கும்” என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாள்தோறும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.