கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி புதினா ரைஸ்!

Published On:

| By Kavi

தென்னிந்தியாவில் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு புதினா ரைஸ். புதினாவில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் கால்சியம் அதிகம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த ஸ்பைஸி புதினா ரைஸ், வீக் எண்ட் ஸ்பெஷலாக இருக்கும்.

என்ன தேவை?

பாசுமதி அரிசி – 2 கப்
புதினா – 2 கட்டு
கொத்தமல்லித்தழை – அரை கட்டு
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2 (மெல்லியதாக, நீளமாக நறுக்கவும்)
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய், லவங்கம் – தலா 2
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புதினா, கொத்த மல்லித்தழையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்யவும். இவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து மையாக  அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக நறுக்கவும்.

பிரஷர் பேன் (pressure pan) அல்லது சின்ன குக்கரில் எண்ணெய் விட்டு… காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த மசாலாவை அதனுடன் சேர்த்துக் கிளறி, 3 கப் நீர் சேர்த்து, அரிசி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி மூடவும். 2 விசில் வந்ததும், அடுப்பை `சிம்’மில் வைத்து, மேலும் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.

காராபூந்தி சேர்த்த தயிர் பச்சடி இதற்கு செம காம்பினேஷன்.

ரிச் முந்திரி புலாவ்!

கலர்ஃபுல் லெமன் ரைஸ்!