திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே கோழிப்பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டைஅருகே உள்ள பாலையூர்நத்தம் கிராமத்தில் கோழிபண்ணை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தப் பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் மன்னார்குடி கோட்டாட்சியரிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், “பாலையூர் நத்தம் பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோழிப்பண்ணை பராமரிப்பில் நோய்த்தடுப்பு ஒரு முக்கிய பணியாகும். ஆனால், தற்போது எங்கள் பகுதியில் அமைக்கப்படும் கோழிப்பண்ணை சுகாகாரமற்ற முறையில் அமைக்கப்படுகிறது. இங்கு கோழிப்பண்ணை அமைந்தால் சுகாதாரம் கெட்டு நோய்கள் ஏற்படும். ஆகவே, எங்கள் கிராமத்தில் கோழிப்பண்ணை அமைக்கக் கூடாது” என்று கூறியுள்ளனர்.
-ராஜ்