கலைஞர் அருங்காட்சியகம் : அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?

Published On:

| By Kavi

public allowed to kalaiganr museum

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடத் தமிழக அரசு சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. public allowed to kalaiganr museum

சென்னை, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில்  கலைஞர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கிவைத்தார்.

இந்த நினைவிடத்தில் கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் “கலைஞர் உலகம்” என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள். சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 26ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட்டாலும் இன்னும் அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (மார்ச் 4) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கலைஞர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு https://www.kalaignarulagam.org/ என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாகக் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும்.

ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைப் பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.

கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பார்வையாளர்களை பணக்காரர்களாக உணர வைக்கும் ‘பிச்சைக்காரன்’!

‘நீங்கள் நலமா?’ : புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

public allowed to kalaiganr museum

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel