தங்களது 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 29) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று முதல் 31ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் சென்னையில் உள்ள டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களை சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் இன்று காலைமுதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சில தொடக்கப் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எகிறிய வெள்ளி விலை!
Share Market : வட இந்தியாவின் கையில் இந்தியா சிமெண்ட்ஸ்… முதலீட்டாளர்கள் ஷாக்!