குலத்தொழிலை வலியுறுத்தும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து, சமீபத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கூறியுள்ளார்.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் நேற்று (செப்டம்பர் 26) தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
சி. ஐ. டி. யு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் அருணன், “மத்திய பா. ஜ. க அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலத்தொழிலை வலியுறுத்தும் திட்டம். 1954 ல் ராஜாஜி கொண்டுவர நினைத்த திட்டம்.
இந்தத் திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 54 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.
பரம்பரை பரம்பரையாக தொழில் செய்வோருக்கு மட்டுமே கடனுதவி என்பது குலத்தொழிலை வளர்ப்பதாகும். குலத்தொழிலையும், சாதியத்தையும் முன்வைப்பதாகும்.
உயர் சாதியில் உள்ளவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு வரலாம். ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களுடைய குலத்தொழில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது சாதியத்தை நிலை நிறுத்தும் வேலை.
எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.
ஒன்றிய பாஜக அரசின் ‘பிரதமர் விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்துக்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில் கேரளாவிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
கேரளாவில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிலையில், முதல்வர் பினராயி விஜயனும், மாநில அமைச்சர்களும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்
2 நாட்களுக்குள்…. மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை ரத்து!
ரெண்டாயிரத்துக்கு வந்த எண்டு….: அப்டேட் குமாரு!