இந்துக்கள் குறித்து இழிவாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா அண்மையில் இந்துக்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்?
என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று பேசியது கடும் எதிர்ப்பை காட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
ஆ.ராசாவை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் இன்று(செப்டம்பர் 20) முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இந்து முன்னணி அறிவித்திருந்தது.
அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் பாதிப்படைந்துள்ளனர். குன்னூரில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேயூர், தெக்கலூர், தேவராயன்பாளையம், காசிகவுண்டன்புதூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு பேக்கரி, உணவகங்கள் போன்ற கடைகள் திறக்கப்படவில்லை.
கலை.ரா
’இணைந்தால் முடியாதது எதுவுமில்லை’-ராகுல்
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு!