நட்சத்திர ஹோட்டல்களில் பலமான விருந்துக்கான முன் தயாரிப்புகளில் ஒன்றாகப் பரிமாறப்பட்டவை சூப் வகைகள். இன்று தெருவோரக் கடைகளின் பிரதான உணவாக மாறியிருக்கிறது.
காபி, டீயைத் தவிர்க்க நினைக்கிற பலரின் சாய்ஸும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சூப் வகைகளே. ஆனால் இந்த வகைகள் சூப்கள் தரமானவையா என்பது கேள்விக்குறிதான். இப்படிப்பட்ட நிலையில் வீட்டிலேயே சத்தான, சுவையான சூப் செய்து அருந்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பனிவரகு – கால் கப் (வேகவைத்தது)
கார்ன் மாவு – 2 டீஸ்பூன்
தக்காளிச் சாறு – ஒரு கப்
கொத்தமல்லி – அரை கப் (நறுக்கியது)
மஷ்ரூம் – 10 (நறுக்கியது)
பூண்டு – 10 பல்
நெய் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மஷ்ரூமைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டுப் பல்லைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் பட்டை சேர்த்துத் தாளிக்கவும்.
நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். சோயா சாஸ் விடவும். வேகவைத்த மஷ்ரூமை இதில் புரட்டி எடுக்கவும். தக்காளிச் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். பின், மூன்று கப் நீர் விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
வேகவைத்த பனிவரகைச் சேர்க்கவும். மஷ்ரூம் வெந்ததும் கார்ன் மாவை நீரில் கரைத்து ஊற்றவும். மிளகைத் தூவி ஒரு கொதிவிட்டுக் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி எடுக்கவும். சுவையான சூப் தயார்.
கம்பு – பச்சைப்பயறு – வெல்ல மசியல்
கிச்சன் கீர்த்தனா: சிக்கன் மஷ்ரூம் ஸ்டஃப்டு சீஸ் ஆலு போண்டா!