சென்னையில் கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த வீராங்கனை பிரியா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் முட்டி சவ்வு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஆனால் அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாததால் காலை எடுத்ததுடன் உயிரிழக்கவும் நேரிட்டது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி 2 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு இன்று(நவம்பர் 18) விசாரணைக்கு வந்தபோது, “எங்கள் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளோம், நாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.
மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. சரணவடைதற்கு காவல் நிலையத்திற்கு செல்வதே ஆபத்தாக உள்ளது. நூற்றுக்கணக்கான மிரட்டல் வருகின்றன, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதி, மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும், ஆனால் அவர்களது குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
மேலும் அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிட்டேன் என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது, வேண்டுமானால் சரணடையுங்கள் என்று கூறினார்.
மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்
கலை.ரா
லவ் யூ தங்கமே: நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்
100 யூனிட் மானிய மின்சாரம் ரத்தா: செந்தில்பாலாஜி பதில்!