பிரியா வழக்கு: முன் ஜாமீன் கேட்கும் மருத்துவர்கள்!

தமிழகம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மருத்துவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால்வழி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி உயிரிழந்தார்.

பிரியாவின் மறைவுக்கு மருத்துவர்கள் கவனக் குறைவாக அறுவை சிகிச்சை செய்ததே காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பிரியாவின் மரணம் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார் தற்போது கவனக்குறைவாக மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுபோன்று தலைமறைவாக இருக்கும் மருத்துவர்களைக் கைது செய்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு மருத்துவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். பிரியாவின் மரணம் துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். சாட்சிகளைக் கலைக்க மாட்டோம். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என்று கூறி முன் ஜாமீன் கேட்டுள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பிரியா

பரூக் அப்துல்லா விலகல்: அடுத்த தலைவர் யார்?

பிரியா மரணம்: வழக்கின் பிரிவுகள் மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *