தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப்டம்பர் 30) சென்னை தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
‘முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப்டம்பர் 30ஆம் தேதி – சனிக்கிழமை) தாம்பரம் வட்டத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, ஜி.எஸ்.டி சாலை, மேற்கு தாம்பரத்தில் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து இதை நடத்த உள்ளது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி/பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (செப்டம்பர் 30) காலை 8 மணி முதல் மாலை 3.மணி வரை,
தாம்பரம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலை பள்ளியில் நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.
மேலும், இந்த முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மற்றும் https://forms.gle/9Uts84HsjpNydng97 என்ற கூகுள் லிங்கில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: சோயா உருண்டை மசாலா
பௌர்ணமியில பாருங்க விக்ரம் லேண்டர்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஜெயக்குமாருக்கு பதில் கே.பி.முனுசாமி… பன்னீர் போடும் குண்டு! அண்ணாமலையின் முடிவு!
Justice A Venkatesh should been allowed to continue in his present assignments. The decision to disturb him is unethical and illegal.