கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி:  மூவர் மீது வழக்குப்பதிவு!

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் மீது இன்று (ஜூலை 5) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சுகுணாபுரம் அருகே செயல்பட்டு வரும் கிருஷ்ணா தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதில் சிக்கி அப்பகுதியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த 4 வெளிமாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மேலும் இரு வெளிமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒரே நேரத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்து வந்த குனியமுத்தூர் காவல்நிலைய போலீசார், தற்போது சுற்றுச்சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், சைட் இன்ஜீனியர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

கனமழை : விடுமுறை உத்தரவிட்ட கோவை கலெக்டர்!

மத்திய பிரதேசத்தில் கொடூரம்: பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சம்பவம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts