தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் இன்று (ஜனவரி 7) ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 50 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் அமையவுள்ள மிட்சுபிசி நிறுவனத்தில் 60% பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சென்னையில் முதலீடு மழை: ஸ்டாலின்
ஹூண்டாய் நிறுவனம் 6180 கோடி ரூபாய் முதலீடு!