திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
மாட்டுப் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படும் இன்று(ஜனவரி 16) திருவள்ளுவர் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம்,
நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் ஆளுநர் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார்.
திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று ஜி20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
கலை.ரா
“அண்ணாமலை வேலையை கர்நாடகாவில் காட்டச் சொல்லுங்கள்” – அமைச்சர் ரகுபதி
சமத்துவ பொங்கல் கொண்டாடிய எடப்பாடி: கரும்புக்காக அடித்துக் கொண்ட கூட்டம்!
Comments are closed.