Price of eggs increased by 30 Paise in Nakakkal

இரண்டு நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு!

தமிழகம்

முட்டை விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் அதிகரித்து இருக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 430 காசுகளாக உயர்ந்து உள்ளது.

முட்டை விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களின் சில்லறை விற்பனையில் தற்போது ஒரு முட்டையின் விலை 5.50 ஆக உள்ளது. நாமக்கல்லில் முட்டையின் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு முட்டையின் விலை 6 ரூபாயாக உயரும் என்று தெரிகிறது.

கறிக்கோழி கிலோ ரூ.122-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாட்டு சிக்கன் குழம்பு!

சனாதனம்… கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *