Presidents visit Coimbatore

ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு வளையத்தில் கோயமுத்தூர்!

தமிழகம்

கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வர உள்ள நிலையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நாளை(பிப்ரவரி 18) நடைபெற உள்ளது.

இதையொட்டி நாளை (18-ந் தேதி) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அங்கு உள்ள ஆதியோகி சிலை முன்பு மஹா சிவராத்திரி விழா உற்சாகமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, தியானங்கள், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரிய கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சி என விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் நாளை நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை அழைப்பாளராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

 இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் திரவுபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்கு பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார்.

Presidents visit Coimbatore

அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து காரில் புறப்பட்டு, 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

பின்னர் கோவிலில் இருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுரையில் இருந்து நாளை தனிவிமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார்.

அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதைகள் குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

கலை.ரா

அதானி நிறுவன பங்கு மோசடி: விசாரணைக்கு குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!

சாதனை மேல் சாதனை: குஷியில் அஸ்வின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *