மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
கோவை ஈஷாவில் இன்று நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு வந்த ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவருக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டி.ஜி.பி சைலேந்திரபாபு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகர மேயர் கல்பனா ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து அவர் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து மையத்தின் நிறுவனர் சத்குரு வரவேற்றார்.

பின்னர் ஈஷா மையத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களை சத்குரு ஓட்டிய பேட்டரி காரில் பயணித்தும், நடந்து சென்றும் அங்குள்ள பல்வேறு இடங்களை குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து அங்கு நடைபெறும் மஹா சிவராத்திரி வழிபாட்டில் குடியரசுத் தலைவர் பங்கெடுத்து வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் நிபந்தனை!
டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தீர்ப்பு: எடப்பாடி, பன்னீரின் எதிர்பார்ப்பு!