president draupadi murmu tamilnadu visit

தமிழகம் வரும் திரவுபதி முர்மு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகம்

2 நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரும் 18 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரவுபதி 2 நாள் பயணமாகத் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மதுரை, கோவை ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளார். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். பிப்ரவரி 18 ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 8.45 மணியளவில் புறப்படும் திரவுபதி முர்மு, காலை 11.45 மணியளவில் மதுரை விமான நிலையத்தை வந்தடைவார்.

president draupadi murmu tamilnadu visit production work

விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்படவுள்ளது.

சுமார் 1 மணி நேரம் மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். பின்னர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கோவை செல்கிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குடியரசுத் தலைவர் வருகை தரவிருப்பதால் நேற்று (பிப்ரவரி 16) மதுரை விமான நிலைய பணியாளர்களுக்கும், மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குடியரசுத் தலைவர் வருகைக்கான ஒத்திகை இன்று (பிப்ரவரி 17) நடைபெறவுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்காகக் காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஒத்திகை வாகன அணிவகுப்பு தொடங்குகிறது. வரும் வழித்தடத்தில் சற்று நேரம் போக்குவரத்தை நிறுத்தி இந்த ஒத்திக்கை பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை நகரம் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது.

மகா சிவராத்திரி

கோவை ஈஷா மையத்தில் நாளை மாலை பூஜையுடன் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.

president draupadi murmu tamilnadu visit production work

இதற்காக மதுரையில் இருந்து புறப்படும் திரவுபதி முர்மு நாளை மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைவார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் அவர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

பிப்ரவரி 19 ஆம் தேதி காலை கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்குப் புறப்பட்டு செல்கிறார்.
ராணுவ மையத்தில் அதிகாரிகளுடன் திரவுபதி முர்மு கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து போரில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் சென்று டெல்லி திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

president draupadi murmu tamilnadu visit production work

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடியரசுத் தலைவர் பாதுகாப்பிற்காக சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் நேற்று கோவை வந்து, அவர் பயணம் மேற்கொள்ளும் அனைத்து வழிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மோனிஷா

தனுஷ் – செல்வராகவன் நேரடி மோதல்!

பழமையான குடைவரைக் கோவிலில் பயங்கர தீ விபத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *