குடியரசுத் தலைவர் இன்றும் நாளையும் சென்னையில் பயணிக்க உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள 8வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (அக்டோபர் 26) மாலை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
முக்கிய தலைவர்களின் வருகையின் போது சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானப்படை தனி விமானம் மூலம் புறப்பட்டு 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு தமிழ்நாடு அரசு வரவேற்பு அளித்த பிறகு குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகைக்கு செல்ல உள்ளார். குடியரசுத் தலைவர் பயணிக்க உள்ள ஜி.எஸ்.டி சாலையில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து நாளை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.
இதனால் நாளை காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை கிண்டி – உத்தண்டி வரையிலான சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து நாளை காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு 11.55 மணியளவில் வருகிறார். அப்போது விமான நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
நேற்று மாலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் மாலை மற்றும் காலை நேரங்களில் குடியரசுத் தலைவர் சாலை வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
எனவே பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செயல்பட்டால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி!
டீ பிரியர்கள் கவனத்திற்கு.. டீ குடிக்கும் போது இவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்!