President Draupadi Murmu arrived in Chennai

சென்னை வந்த குடியரசுத் தலைவர்: வரவேற்ற ஆளுநர், முதல்வர்!

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா நாளை (அக்டோபர் 26) நடக்கிறது.

இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினும் நேரில் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ‘மணிமேகலை’ புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பரிசாக வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார். ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சாம்சங் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் போன் வாங்க முடியலயா? இதோ உங்களுக்காக சாம்சங் எஸ்23 FE!

ஸ்ட்ரெஸ் ஆனா தூங்கிடுங்க மக்களே……. தூக்கம் ரொம்ப முக்கியம்!

மகளிர் உரிமைத்தொகை: மேல்முறையீட்டு மனு 30 நாட்களில் பரிசீலனை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts