கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்று சென்னை மாநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசியபோது,
“கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் (வயது 47) என்பது தெரியவந்துள்ளது. ஒரு கட்சியின் தலைமை அலுவலகம், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதே போன்று பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். சமீபத்தில் புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இன்று காலை மது அருந்தியுள்ளார்.
பின்னர் மாலையில் கிண்டி சர்தார்பட்டேல் சாலை வழியாக நடந்து வந்த கருக்கா வினோத் வீசிய பெட்ரோல் குண்டானது ஆளுநர் மாளிகை மெயின் கேட் பக்கத்தில் உள்ள பேரிகார்டுகள் முன்பாக விழுந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை பிடித்து விட்டார்கள். அவர் வீசிய பாட்டிலில் இருந்து தீ வரவில்லை. அவரிடம் இருந்த 4 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கருக்கா வினோத் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிக்கிறது: அண்ணாமலை
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது!