ஆதாா் மற்றும் மகப்பேறு அட்டை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆதரவற்ற கா்ப்பிணி இரட்டை குழந்தைகளுடன் பலியானார்.
கா்நாடக மாநிலம், தும்கூா், பாரதிநகரில் வசித்து வந்த நிறைமாத கா்ப்பிணியான ஆதரவற்ற பெண் கஸ்தூரிக்கு (30) புதன்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அப் பகுதியில் உள்ளவா்கள் பணம் சேகரித்து, அப்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி தும்கூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரிடம் ஆதாா் அட்டையோ மகப்பேறு பதிவு அட்டையோ இல்லாததால், மருத்துவமனை மருத்துவா், செவிலியா்கள் கஸ்தூரிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டனா்.
பிரசவ வலியால் துடித்த கஸ்தூரி, வேறு வழியின்றி வீடு திரும்பினாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவருக்கு வீட்டிலேயே ஒரு குழந்தை பிறந்தது.
மற்றொரு குழந்தையைப் பெற்ற போது ஏற்பட்ட ரத்தப்போக்குக் காரணமாக கஸ்தூரி உயிரிழந்தாா். பிரசவித்த இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இவா் தமிழகத்தைச் சோ்ந்தவா் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட சுகாதார அலுவலா் மஞ்சுநாதா ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளாா்.
கலை.ரா
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
ஹாட்ரிக் விக்கெட்: உலக சாதனை படைத்த அயர்லாந்து வீரர்!
எல்லாரும் சட்டத்தை நேர்மையாக பின்பற்றுகிறார்களா?
3 தமிழர்கள் உயிர் போய் விட்டதே!
இது அரச பயங்கரவாதம். ஏழைகள்தானே என்கிற இளக்காரம்.