கிச்சன் கீர்த்தனா: இறால் மசால்

தமிழகம்

அசைவ உணவுகளில் பல வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல… சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த இறால் மசாலை சாதம், சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொடுகறியாகவும் பயன்படுத்தலாம்.

என்ன தேவை?

இறால் – ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 100 மில்லி
சோம்பு – 2 கிராம்
பட்டை – ஒரு கிராம்
கிராம்பு – ஒரு கிராம்
அன்னாசிப்பூ – ஒரு கிராம்
ஏலக்காய் – ஒரு கிராம்
பிரிஞ்சி இலை – ஒரு கிராம்
வெந்தயம் – ஒரு கிராம்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 25 கிராம்
கறிவேப்பிலை – 2 கிராம்
பூண்டு விழுது – 40 கிராம்
இஞ்சி விழுது – 20 கிராம்
மஞ்சள்தூள் – 3 கிராம்
தக்காளி – 80 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 15 கிராம்
மிளகாய்த்தூள் – 30 கிராம்
எலுமிச்சைப்பழம் – ஒரு பழம் (சாறு எடுத்துக்கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

இறால் மசாலாவுக்கு…

சோம்பு – 4 சிட்டிகை
சீரகம் – சிட்டிகை
மிளகு – 15 கிராம்
ஏலக்காய் – ஒன்று
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2 (இவற்றை வெறும் சட்டியில் வறுத்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவும்.)

எப்படிச் செய்வது?

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், இறால் மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு, நன்கு சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து வதக்கவும். இறால் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

விரால் மீன் ரோஸ்ட்

கிரிஸ்பி இறால் வறுவல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.