prakash raj not related in pranav jwellery scam

மோசடி வழக்கு: விசாரணையில் வெளிவந்த தகவல்… பிரகாஷ் ராஜ் நிம்மதி பெருமூச்சு!

தமிழகம்

திருச்சி பிரணவ் ஜுவல்லரி பண மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. prakash raj not related in pranav jwellery scam

திருச்சியை தலைமையிடமாக கொண்ட பிரணவ் ஜுவல்லரி மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில், ஈரோடு, புதுச்சேரி ஆகிய 7 இடங்களில் இயங்கி வந்தது. இந்த ஜுவல்லரியின் உரிமையாளர்களாக மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.

இவர்கள் பொதுமக்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிவித்தனர். குறிப்பாக ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும், அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம். இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12வது மாத தவணை இலவசம் என்றும் அறிவித்தனர்.

இந்த அறிவிப்புகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.

prakash raj not related in pranav jwellery scam

இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை என ரூ.150 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறிவித்தபடியே சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த மக்களுக்கு நகை மற்றும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் தலைமறைவாகியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் பிரணவ் ஜுவல்லரிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் மோசடி தொடர்பான ஆவணங்களைப் பொருளாதார குற்றப்பரிவு போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து பிரணவ் ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து பிரணவ் ஜுவல்லரிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகள், ரூ.23.70 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரது மனைவி கார்த்திகாவை பொருளாதார குற்றப்பரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் இருவரிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் பிரணவ் ஜுவல்லரி பண மோசடிக்கும் தொடர்பில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ் பிரணவ் ஜூவல்லரியின் சேமிப்பு கணக்கு திட்டம் குறித்த விளம்பரத்தில் மட்டும் தான் நடித்தார் என்றும், அதற்கான ஊதியம் அவருக்கு முறைப்படி வங்கி கணக்கு மூலமாக தான் வழங்கப்பட்டது என்றும், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு சட்டவிரோதமாக நாங்கள் பணம் தரவில்லை என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோசடியில் தொடர்பு இல்லை என தெரியவந்திருப்பதால் பிரகாஷ்ராஜிடம் விசாரணை நடத்தப் போவதில்லை எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தன் மீது தவறில்லை என்ற செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், “தமிழ் புரியாதவர்களுக்கு, பிரேக்கிங் நியூஸ்: விசாரணைக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தமிழ்நாட்டின் பிரணவ் நகைக்கடை மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஈடுபடவில்லை. என்னை நம்பி ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

IPL2024: சென்னைக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் ஸ்பின்னர்கள்!

தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்: அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பற்றி தெரியுமா?

prakash raj not related in pranav jwellery scam

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “மோசடி வழக்கு: விசாரணையில் வெளிவந்த தகவல்… பிரகாஷ் ராஜ் நிம்மதி பெருமூச்சு!

  1. விளம்பரத்துல நடிச்சவங்கள எல்லாம் பிடிக்கனும்னா, பிரதமர் கூட தப்ப முடியாதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *