தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 14) அதிகாலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த இரண்டு நாட்களில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று(அக்டோபர் 13) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ” அக்டோபர் 14 முதல் 18க்கு இடைப்பட்ட நாட்களில், ஒரு நாள் காஞ்சிபுரம்-திருவள்ளூர்-கடலூர், சென்னை(KTCC) பகுதியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது 16ஆம் தேதியாக இருக்கலாம்.
ஆனால் சென்ற வருடம் ‘மிச்சாங்’ புயலின் போது சென்னையில் பெய்த மழை போல் இது இருக்காது. என்னுடைய அனுபவத்திலிருந்து, 10 செ.மீ. மழைவரை சென்னை தாக்குபிடிக்கும். அந்த அளவிற்கு மேல் மழை பெய்தால், சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இன்று காலை அவர் ஃபேஸ்புக் பதிவில் “வட தமிழ்நாட்டிற்கு மேல் மழை மேகங்கள் உருவாகியிருக்கின்றன. சென்னையில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இரவு முதல் அதிகாலை நேரம் வரைதான் பெரும்பாலும் மழை பெய்யும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் இரே இடத்தில் நிலைத்தால், சென்னையில் அதிகனமழை பெய்யும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை கூடியதா குறைந்ததா? இன்றை நிலவரம் என்ன?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியிட்டார் அன்பில் மகேஸ்!
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… கலெக்டர்களுக்கு சென்ற அவசர கடிதம்!