சென்னையில் இன்று கனமழை இருக்குமா? – பிரதீப் ஜான் சொன்ன அந்த விஷயம்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 27) தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னையில் நேற்றை (நவம்பர் 26) விட இன்று குறைவாகவே மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தெற்கு – தென் கிழக்கு பகுதியில் நிலவி வருகிறது. அதனால் சென்னையை பொறுத்தவரை நேற்றை விட இன்று குறைவாகவே மழை பெய்யும். அதேவேளையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும்போது சென்னையில் கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘ஃபெங்கல்’ புயல் இன்று உருவாகிறது… வானிலை மையம் அலர்ட்!

தத்துவம் இல்லாத தலைவர்கள்… ‘விடுதலை 2’ பேசும் அரசியல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts