சென்னையில் இன்றும் நாளையும் மழை… பிரதீப் ஜான் தகவல்!

Published On:

| By Selvam

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிசம்பர் 26) காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

இந்தநிலையில், சென்னையில் இன்றும் நாளையும் (டிசம்பர் 26, 27) லேசானது முதல் மிதமான மழை பெயக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால், தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்.

கிறிஸ்துமஸ் தினங்களில் சென்னையில் மிகவும் அரிதாக தான் மழை பெய்யும். கடந்த 25 ஆண்டுகளில் 2001, 2003, 2022-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் (2024) சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மழை பெய்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் போன்ற உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

அடுத்த 6 மாதங்களில் நாம் மழைக்காக ஏங்குவோம். அதனால் இப்போதே மழையை ரசியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சுனாமி நினைவு தினம்… உறவினர்கள் அஞ்சலி!

பாப்கார்ன்… பழைய விலையே தொடரும்: மத்திய அரசு உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share