சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மழைபெய்தாலும், பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வருகிறது.
அதிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக சூரியன் மக்களை சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று(செப்டம்பர் 19) அதிகாலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் திடீரென மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சென்னையில் தற்போது சற்று இதமான வானிலை நீடிக்கிறது.
வெதர்மேனின் பிரதீப் ஜானின் கணிப்பு:
இதுதொடர்பாக ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் இன்று வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “கடந்த பல நாட்களாக வெயில் சுட்டெரித்த காரணத்தினால், இன்று காலை சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குக் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர் பெல்டில் ஆங்காங்கே மழை பெய்யும் மற்றும் இந்த மாதம் கடைசி முதல் பரவலாக மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னையின் வானிலை நிலவரம் பற்றி “ இன்று காலை வட சென்னை பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஆனால் நேரம் போகப் போக வெயில் திரும்பும். தென் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
இன்னும் சில நாட்களுக்கு அதிகாலையிலும், இரவிலும் மழை ஆங்காங்கே மழை பெய்யும். சிறிது சிறிதாக வெப்பம் குறையும். இம்மாதக் கடைசியில் வட சென்னையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கும்.
சேப்பாக்கத்தில் இரவு மற்றும் அதிகாலையில்தான் மழை பெய்யும் என்பதால், இந்தியா-பங்களதேஷ் ஆட்டத்திற்கு எந்த பாதிப்பு இல்லை” என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வெயில் தொடரும் எனவும், குறிப்பாக மதுரையில் வெய்யில் கொளுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’கங்குவா’ ரிலீஸ்: குழந்தைகள் தினத்தை தேர்வு செய்தது ஏன்?
டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு எப்போது?
படுகா உடையில் பூஜா கண்ணன்… சாய் பல்லவி என்ன செய்கிறார் தெரியுமா?