விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்!

தமிழகம்

ராஜபாளையம்  அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்l

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் 400க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

இவர்களுக்கு கடந்த 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி  வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  2021- 2023 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு முதலாளிகள் முன்வராத காரணத்தினாலும்,

தங்களுக்கு சம்பளத்தில் 75% உயர்த்தி தர வேண்டும் போனஸ் 20% சதவீதம் உயர்த்தி தரவேண்டும்,

என கோரிக்கை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தும் அது தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் உக்கிரம் அடைந்தது.

ஏ.ஐ.டி.மயு. வட்டார தலைவர் அய்யனார் சி.ஐ.டி.யு.சி வட்டார தலைவர் ராசு தலைமையில் செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று காலை 11மணி அளவில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தை வலுப்பெற செய்தனர்.

ஈரோடு இடைத் தேர்தலில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உயிரோடு பட்டினியால் வாடி வதங்கி கொண்டிருக்கும் தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சக்தி

நீட் ரகசியத்தை சொல்லுங்கள் உதயநிதி: முன்னாள் அமைச்சர் கேள்வி!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் -எடப்பாடி… ஈரோடு இடைத் தேர்தல் பட்ஜெட் எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *