Power loom

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும்: விசைத்தறியாளர்கள்!

தமிழகம்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும் அபாயம் ஏற்படும் என்று   விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறையினர் பங்கேற்றனர்.

அதில் பங்கேற்று பேசிய திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம், “சொந்த கட்டடம் கட்டி, குறைந்தபட்சம் 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 – 30 லட்சம் ரூபாய் வரை தேவை.

இவ்வாறு, முதலீடு செய்தாலும், 30,000 ரூபாய்தான் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்னை, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்சினை மற்றும் நூல் விலை உயர்வு என கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது.

தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும் அபாயம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

மின் கட்டணம்: யார் யாருக்கு எவ்வளவு உயர்வு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *