கிச்சன் கீர்த்தனா: உருளை – கஸூரி மேத்தி மசாலா!

தமிழகம்

வாரம் முழுவதும் வாய்க்குப் பூட்டு; வார இறுதியில் ஒரு நாள் மட்டும் விரும்பியதை உண்ண அனுமதி – எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கான முதல் அட்வைஸ் இதுவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களும்  அந்த ஒருநாளில் ருசித்து மகிழ வித்தியாசமான, இந்த உருளை – கஸூரி மேத்தி மசாலா பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

என்ன தேவை?

சிறு உருளைக்கிழங்கு – 300 கிராம்
கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 5 அல்லது 6
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் விடாமல் மல்லி (தனியா), சீரகம், வரமிளகாயை வாசனை வரும்வரை வறுத்து ஆற வையுங்கள்.

ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து,  நைஸாகப் பொடித்துக் கொள்ளுங்கள். அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கஸூரி மேத்தி போட்டு தாளித்து, மஞ்சள்தூள், உப்பு, வேகவைத்த உருளைக்கிழங்குகளைச் சேர்த்து கிளறுங்கள்.

இதனுடன் பொடித்து வைத்துள்ள பொடியை உருளையின் மேல் தூவி எல்லா இடங்களிலும் படும்படியாக புரட்டி நன்றாகக் கலந்து பொன்னிறமாக ரோஸ்ட் செய்துப் பரிமாறவும்.

கோதுமை உசிலி

உளுத்தம் சுவாலை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *