பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டான்செட்(TANCET-2023) தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டான்செட் தேர்வு என்பது தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு டான்செட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வை ஆண்டுதோறும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
M.E, M.B.A, M.TECH, M.ARCH, M.PLAN ஆகிய முதுநிலை மேலாண்மை மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு, பிப்ரவரி மாதம் 25,26ல் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முந்தைய அட்டவணையின்படி, எம்டெக் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு பிப்ரவரி 25 ஆம் தேதியும், எம்பிஏ தேர்வு பிப்ரவரி 26 ஆம் தேதியும் நடைபெற இருந்தது.
தேர்வு தேதி tancet.annauniv.edu இந்த இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
TANCET 2023 தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் காலக்கெடுவிற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவம் ஆன்லைன்னில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
இந்த நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!
டிபியில் நடிகை படம்: ஏமாந்த இளைஞரிடம் பணம் பறித்த பெண்