போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் இன்று (ஜனவரி 19) நடைபெற்ற பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.
அதன்படி ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஜனவரி 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தன.
இதனிடையே ஜனவரி 19 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தினை தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி இன்று 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
அப்போது, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பிப்ரவரி 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட தொழிற்சங்கத்தின்வர் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டனர். அதன்படி பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
படிப்புக்காக வேலைக்குச் சென்றேன்… ஆனால்… : திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண் பேட்டி!
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்: விஜய் தேவரகொண்டா