நாளை (டிசம்பர் 10) நடைபெற இருந்த வனத்தொழில் பழகுநர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனதொழில் பழகுநர் (தொகுதி 6) பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
37,000- 1,38,500 ரூபாய் ஊதியத்தில் 10 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக ஆன்லைன் மூலம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
மேலும் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு தேர்வு, விருப்ப பாடத் தேர்வு ஆகியவை டிசம்பர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை காலை மாலை இருவேளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை நடைபெறுவதாக இருந்த வனத்தொழில் பழகுநர் தேர்வுகள் மான்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரியா
மாண்டஸ்: புறநகர் ரயில்கள் இயக்கப்படுமா?
வாஷிங்டன் சுந்தர் புதையலை போன்றவர்:பாராட்டிய முன்னாள் வீரர்!