அன்புமணி மனைவியின் ஐஸ் பேக்டரிக்கு சீல்!

தமிழகம்

வாடகை பாக்கி நிலுவை புகாரில் சென்னை காசிமேட்டில் உள்ள சவுமியா அன்புமணியின் ஐஸ் பேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணிக்கு சொந்தமான ‘சுமித்ரா ஏஜென்ஸி’ என்ற ஐஸ் பேக்டரி செயல்பட்டு வருகிறது.

துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் ஐஸ் பேக்டரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை துறைமுக முதன்மை அதிகாரி, துரை மாணிக்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வாடகை தொகையை கட்டவில்லை என்று சீல் வைக்க வந்தனர்.

அப்போது, மொத்தம் ரூ.38 லட்சம் வாடகை பாக்கி செலுத்த வேண்டிய நிலையில் ரூ.5 லட்சம் மட்டும் வாடகை தொகையாக செலுத்திவிட்டு மீதமிருக்கும் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக ஐஸ் பேக்டரி தரப்பினர் அவகாசம் கேட்டுள்ளனர் . இதனால் அதிகாரிகள் அவகாசம் வழங்கி ஐஸ் பேக்டரிக்கு சீல் வைக்காமல் திரும்பி சென்றனர்.

ஆனால் 2 மாதங்கள் ஆகியும் ரூ.33 லட்சம் பாக்கி வாடகை தொகையை செலுத்தாமல் இருந்து வந்ததால், இன்று 5 பேர் கொண்ட துறைமுக அதிகாரிகள் காவல் துறை உதவியுடன் சீல் வைத்தனர்.

மோனிஷா

எனக்கு மெமோவா? தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் பதில்!

“எடப்பாடி நீதிமன்ற படியேற தயாராக வேண்டும்”: ஆர்.எஸ்.பாரதி

+1
1
+1
4
+1
0
+1
1
+1
0
+1
2
+1
1