சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டின் இறுதியில் ஃபெஞ்சல் புயல் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பிய நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.
இம்மழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில், புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 302 கன அடி, பூண்டி ஏரிக்கு 280 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி என, நீர் வரத்து உள்ளது.
ஆகவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 3,158 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,325 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 366 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் பரந்தூர் செல்லும் விஜய் வரை!
கிச்சன் கீர்த்தனா: ஆனியன் சாதம்
பிக்பாஸ் சீசன் 8 : வெற்றி மேடையில் முத்துக்குமரன் செய்த சம்பவம்!
அமாவசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு
சைஃப் அலிகான் மீது தாக்குதல்… பின்னணியில் வெளிநாட்டு சதி? நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: மகளிர் உரிமைத் தொகை உயர்வு! ஸ்டாலின் mega மாஸ்டர் பிளான்!