நவம்பர் இறுதிக்குள் புதுப்பொலிவு பெறும் பூம்புகார்: அமைச்சர் உறுதி!

தமிழகம்

பூம்புகார் சுற்றுலா வளாக மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.4 கோடியே 35 லட்சத்து 7,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் டேனிஷ் கவர்னர் மாளிகை புனரமைப்பு பணி, ரூ.3 கோடியே 63 லட்சத்து 47,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் டேனிஷ் கோட்டை புனரமைப்புப் பணி, ரூ.23 கோடியே 64 லட்சத்து 44,000 மதிப்பீட்டில் சீர்காழி வட்டம் பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேற்று (அக்டோபர் 10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தரங்கம்பாடி, பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடுத்தக்கட்ட திட்ட வரைவு தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து உரிய ஆலோசனைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

டேனிஷ் கோட்டை புனரமைப்பு பணிக்காக சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை கலந்து அரைத்து சுண்ணாம்பு கலவை தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.

பின்னர் பூம்புகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இரா.ராஜேந்திரன், “தரங்கம்பாடி, பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பூம்புகாரின் புனரமைப்பு பணிகள் 65 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது. விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும்.

தரங்கம்பாடி, பூம்புகார் சுற்றுலா வளாகங்களில் சுற்றுலாவினருக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். தரங்கம்பாடி, பூம்புகாரில் தங்கும் விடுதிகள் கட்டுவது குறித்து அடுத்தக் கட்ட திட்டப்பணியில் சேர்க்கப்படும்” என்று அமைச்சர் ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ராகி லட்டு

முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்

சென்னை கடற்கரை – வேளச்சேரி: நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

வேல சொல்லியே உசுர வாங்குறாங்க: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *