அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் இந்த ஆண்டு 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அந்தவகையில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.150-லிருந்து ரூ.225-ஆகவும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் ரூ.450-லிருந்து ரூ.600-ஆகவும் உயர்த்தப்பட்டது.
தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து செமஸ்டர் தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக, பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி,
“அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை 50 சதவிதம் உயர்த்தி முந்தைய ஆண்டு சிண்டிகேட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த கட்டணம் நிறுத்திவைக்கப்படுவதாக அப்போதே அறிவித்திருந்தேன்.
இந்தநிலையில், ஓராண்டு முடிந்துவிட்ட காரணத்தில், இந்த ஆண்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு சிரமாக இருக்கும் என்பதால், கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில், உயர்கல்வித்துறை செயலர், பதிவாளர்,தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோருடன் ஆலோசித்து தேர்வு கட்டணத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இனிமேல் புதிதாக சிண்டேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். ஆகவே, மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு”… வானிலை மையம் அப்டேட்!
”எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் அண்ணாமலை சிறுமைப்படுத்தி பேசுகிறார்” : எடப்பாடி குற்றச்சாட்டு!