பொங்கல் பண்டிகை: நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு!

தமிழகம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை (செப்டம்பர் 12) முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டு பொங்கல்,  ஜனவரி 17 காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் நாளை 12ஆம் தேதி முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து பேசியுள்ள ரயில்வே துறை அதிகாரிகள், “ரயில்வேயில், 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள மக்கள், முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும்.

ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களைத் தேர்வு செய்து,

சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு செல்வோர், அதாவது ஜனவரி 10ஆம் தேதி பயணிக்க விரும்புவோர்,

நாளை 12ஆம் தேதியிலிருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் எடுத்த டிக்கெட்டிலும் புறப்படும் இடத்தை மாற்றலாம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *