பொங்கல் பயணம்: உங்கள் ஊருக்குச் செல்ல… எந்த இடத்தில் ஏற வேண்டும்?

தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம், கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு.

ஆகிய ஆறு பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் எந்த இடத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம் என்ற விவரத்தையும் சென்னைப் பெருநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  சென்னைப் பெருநகர போக்குவரத்துக் கழகம்  வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள்.

இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஜனவரி 12 முதல் ஜனவரி 14 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக ஜனவரி 18 முதல் ஜனவரி 19 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சிறப்புப் நகர பேருந்துகள்!

அதன்பேரில், சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.

கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பேருந்துகள் கத்திப்பாரா பாலம், எஸ்.வி.படேல் ரோடு, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளுர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயங்கும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து (CMBT): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,

காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களுர் செல்லும் பேருந்துகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

முதல் ஒருநாள் போட்டி : இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

கிச்சன் கீர்த்தனா : பால் பொங்கல்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *